பிக் பாஸில் அக்ஷயா, பிராவோ வாங்கிய சம்பளம் - வெளியானது அதிர்ச்சி தகவல்.!
bigg boss akshaya and bravo salry
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் பூகம்பம் டாஸ்க் நடைபெற்றது. அதே சமயம் மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் இல்லத்திற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக வருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் படி நடைபெற்ற மூன்று டாஸ்க்குகளில் இரண்டு போட்டியில் அக்ஷயா, பிராவோ இரண்டு பேர் தோற்றனர். இவர்கள் இருவரும் பிக்பாஸின் அறிவிப்பு படி வெளியேற்றப்பட்டு அவர்களுக்குப் பதிலாக விஜய் வர்மா மற்றும் அனன்யா உள்ளிட்ட இருவரும் உள்ளே வந்தார்கள்.
இந்த நிலையில், வெளியேறிய அக்ஷயா மற்றும் பிராவோ இருவரின் சம்பள் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது . அதன்படி, அக்ஷயா ஒரு எபிசோடுக்கு ரூ. 15,000 வீதம் எட்டு லட்சத்திற்கு மேலாகவும், பிராவோ ஒரு எபிசோடுக்கு ரூ.12,000ம் வீதம் இரண்டு லட்சத்திற்கு மேலும் வாங்கியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
English Summary
bigg boss akshaya and bravo salry