அவதாரின் அடுத்த அவதார்.! வலைத்தளங்களில் வைரலாகும் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், திரைக்கு வந்த படம் அவதார். இந்தப்படம் உலகம் முழுவதும் புகழ்பெற்று அதிக வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் மூழ்க வைத்தது. 

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. "அவதார்: தி வே ஆப் வாட்டர்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம்  இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அடுத்த மாதம் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

காடுகளை தொடர்ந்து தண்ணீரை பற்றிய படமாக உருவாகியுள்ள படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், தற்போது இந்தப் படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இந்தப் படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

avathar two movie trailar release


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->