அவதார் 2 : இரண்டு வாரத்தில் ரூ 7 ஆயிரம் கோடி வசூல்.!
avatar the way of water movie collecteion seven thousand in two weeks
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவதார் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்றிருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து இது வசூலிலும் சாதனை படைத்து, 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் கடந்த 16 ந்தேதி வெளியானது.

இந்த திரைப்படம், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியாகும். இந்த படம் வெளியாகி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் ரூ 7 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் இந்தப் படம் பத்து நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. இனி வரும் நாட்களில் ரூ.500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவதார்: தி வே ஆப் வாட்டர் என்ற படம் தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது.
English Summary
avatar the way of water movie collecteion seven thousand in two weeks