AK62 படத்தில் அஜித்துக்கு வில்லனாகும் மரணமாஸ் வில்லன்... யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் 3 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் இணைகிறார். இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அந்த வகையில் AK62 என அழைக்கப்படும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி 17- ல் துவங்க உள்ளதாகவும், இதை 2023 தீபாவளிக்கு வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த் சாமியும், காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானமும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aravind Samy and Santhanam act in AK62 movie


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->