பாலிவுட்டில் களமிறங்கிய அனிருத்.! ஒரே ட்ராக்கில் ட்ரெண்டாகிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. தற்போது அவர் பாலிவுட்டில் ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து இவர் இயக்கிய இந்த முதல் படமே ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவித்தது.

இவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் அக்‌ஷய்குமார் நடிப்பில், உருவாகியுள்ள ‘படே மியன் சோட்டே மியன்’ என்றப் படத்தின் டைட்டில் டிராக்கை இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் அபுதாபியின் ஜெராஷ்-இல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும் முதல் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த டைட்டில் டிராக்கிற்காக நூறுக்கும் அதிக நடன கலைஞர்கள் திரையில் தோன்றும்படி படமாக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ சீசர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார்.

"இந்த பாடலுக்கு அக்‌ஷய்குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடலின் ஹுக்லைன் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகும்” என்று படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aniruth song sing in pollywood movie


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->