"என்னை கருணை கொலை செய்யுங்க ப்ளீஸ்." அங்காடித்தெரு நடிகை குமுறல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் அறியப்பட்டவர் சிந்து. இந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. அதைத் தவிர நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்திருக்கிறார் இவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு  இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது  மருத்துவ சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து தனது மார்பகங்களை நீக்கி விட்டார். ஆனாலும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து இவரால் மீள முடியவில்லை. இதற்காக தஞ்சாவூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 35 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை எடுத்திருக்கிறார்.

அந்த நேரத்தில் இவரது மகளின் கணவர் மரணம் அடைந்ததால் சென்னை திரும்ப வேண்டிய சூழலில் சிகிச்சையை பாதையிலே விட்டுவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார் இவர். இதன் காரணமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து தற்போது வலியால் மிகுந்த வேதனையை அனுபவித்து வருவதாக  தெரிவித்துள்ளார். இரவு நேரங்களில் உறங்கும் போது ஏற்படும் வலியால் தன் தம்பியிடமே தன்னை தலையணை வைத்து அழுத்தி கருணை கொலை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு மருத்துவம் செய்த மருத்துவரிடம் இந்த நோயின்  வேதனையை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் அதன் காரணமாக தனக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார் இவர். மேலும், அந்த மருத்துவர் பெங்களூருவில் புற்றுநோய் கட்டிகளை கரைப்பதற்கு மருத்துவ வசதி இருப்பதாகவும் அங்கு சென்று சிகிச்சை  பெற பரிந்துரை செய்திருக்கிறார். இதற்காக தமிழக முதல்வரின் உதவியை நாடிருக்கிறார் சிந்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

angadi theru actress sindhu pleaded to her doctor because of her unbearable pain


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->