#AK62 : அஜித் குமாரின் அடுத்த படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ‌.

இதனையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் இணைகிறார். இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் AK62 என அழைக்கப்படும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாகவும், இதை 2023 தீபாவளிக்கு வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AK 62 movie OTT in Netflix


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->