#AK62 : அஜித் படத்தின் அசத்தல் அப்டேட்.? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ‌.

இதனையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து  நடிகர் அஜித் குமாரின்  62வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் 62 ஆவது படத்தை தயாரிக்கும் நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10:30 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது.

அதன்படி இந்த அறிவிப்பு நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள 62 வது படத்தின் முக்கிய அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் தற்போது #AK62 என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AK 62 movie Big announcement tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->