தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்! கோ வில்லன்... விமானம் ஏறிய விஜய்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பணிகளை தொடங்க நேரம் வந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத தளபதி 68 படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கிய நிலையில், 'லியோ' படத்தின் ரிலீஸுக்கு பின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருவதாகவும், இதற்காக விஜய் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்று தெரிகிறது. 

இந்த நிலையில்,'அஞ்சாதே’, ‘கோ’, ‘வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் அஜ்மல்  தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக  நடிகர் பிரசாந்த் வெளியிட்ட தகவலின்படி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, வைபவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் லைலா ஆகியோர் நடிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajmal Joint to Thalapathy 68 team


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->