அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட்.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் திரையரங்களில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கமவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா அல்லது நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே 1ம் தேதி வெளியாகிய நிலையில், தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. 

இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது வலைதளங்களில் 'விடாமுயற்சி' அப்டேட் குறித்து ட்ரண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.  இந்த அப்டேட் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அல்லது படப்பிடிப்பு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith in vidamuyarchi movie update on July 3


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->