"கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லுது" தயாரிப்பாளரை திட்டினாரா அஜித்.? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் ஆக இருந்து தலயாக உருவெடுத்தவர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.

விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த அந்த திரைப்படம்  தற்போது மகிழ்த்திருமேனியால் இயக்கப்படுகிறது. அஜித் பிறந்தநாளான இன்று அந்தத் திரைப்படத்திற்கான பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கு 'விடாமுயற்சி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த தலைப்பு பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும்  தல ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன்  அஜித் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில்  அஜித் ஒரு தயாரிப்பாளரை கண்ட நாயெல்லாம் எனக்கு புத்தி சொல்லுது என்று திட்டியதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோ அஜித் பிறந்த நாளான இன்று வைரலாகி இருக்கிறது. சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவரானஅஜித்  சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததாகவும்  அந்த நேரத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கோதண்ட ராமையா அஜித்திற்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த அஜித் ஒரு பேட்டியின் மூலம் கண்ட நாய் எல்லாம் எனக்கு புத்தி சொல்கிறது என தெரிவித்ததாக  அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ajih abusing a producer shocking revelation by famous cinema journalist


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->