முதல் முறையாக ரஜினியை இயக்கவுள்ள மக்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.?! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.!  - Seithipunal
Seithipunal


தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதன் பின்னர் சினிமா வீரன், வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த மார்ச்சில் 'ஓ சாத்தி சால்' என்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். 

இந்த படத்தை மீனு அரோரா தயாரித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் முசாஃபர் என்ற இசை ஆல்பத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கியிருந்தார். இத்தகைய நிலையில், ஒரு சூப்பர் அப்டேட் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வெளியாகி இருக்கிறது. 

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று.. ட்விட்டர் முகப்பு படத்தை மாற்றிய சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த்.! - Seithipunal

தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், இதனை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இசை பணிகளை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மேற்கொள்ளப் போவதாகவும், இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதல் முறையாக தந்தை ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் .ஏற்கனவே சௌந்தர்யாவின் கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aishwarya rajinikanth direct rajinikanth at first time


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal