ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து விமர்சித்த நபர்.. ரசிகர்கள் கொலை வெறி தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

3டியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.


 இதில், படக்குழு  ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் இன்று வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை பார்த்த பின்னர் படம் சரியில்லை என கூறிய இளைஞரிடம் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adiprush movie review in theatre fans attack in Hyderabad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->