'ஆதிபுருஷ்' திரைப்படம் நாளை ரிலீஸ்.. இணையத்தில் வைரலாகும் 'அனுமன் சீட்' புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

3டியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக விடப்போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ஆதிபுருஷ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இதில், படக்குழு  ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமனுக்கு இருக்கை ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு இருக்கையில் ஆஞ்சநேருவின் புகைப்படத்துடன் ‘ஜெய் ஶ்ரீ ராம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adiprush movie Hanuman seat photo viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->