வசூல் மழை பொழியும் ஆதிபுருஷ் திரைப்படம்.. 3 நாட்களில் எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

3டியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கடந்த ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

 இதில், படக்குழு  ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

ஆனால், சில இடங்களில் ஆதிபுருஷ் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த படத்தின் முதல் நாள் மட்டும் ரூ.140 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளது.

 இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.340 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், 2 நாட்களில் அதிக வசூல் செய்த சாதனை பதான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adiprush movie collected 340 crores in 3 days


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->