விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு அறிவுரை கூறிய வனிதா.!! 
                                    
                                    
                                   actress vanitha advice to yashika
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த மாதம் மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே யாஷிகா நேற்று முன்தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார். அந்த பதவியில், சிற்பத்தில் உயிரிழந்த தனது தோழி குறித்து அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த சிலர் யாஷிகாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தாலும், பலர் அவரை திட்டி தீர்த்தனர். 

இந்நிலையில், யாஷிகாவின் பதிவை பார்த்த நடிகை வனிதா அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். வனிதா கூறியதாவது, யாருக்கு வேண்டுமானாலும் இது நடந்திருக்கலாம். இதனால்தான் விபத்து என்கிறோம். பிறப்பும், இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டவை. யாராலும் மாற்ற முடியாது .உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீ குற்றம் சொல்வதை முதலில் நிறுத்து.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதே. தெளிவாக இருக்க வேண்டும். நன்றாக ஓய்வு. உடல் நலனை பார்த்துக்கொள். இந்த விபத்தில் இருந்து நீ உயிர் பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என வனிதா தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       actress vanitha advice to yashika