அந்த மாதிரி சீன் வேண்டாம் ஆள விட்ருங்க."! பயந்து அழுத நடிகை சோபனா! சுவாரசியமான தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சோபனா. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி மற்றும் அரவிந்த்சாமி மம்முட்டி ஆகியோரின் நடிப்பில் வெளியான தளபதி திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டவர். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் நல்ல பரதநாட்டிய டான்ஸராகவும் இருப்பவர் ஷோபனா.

1982 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஏப்ரல் 18 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மோகன் லால் மற்றும் மம்முட்டி உள்ளிட்ட  முன்னணி நட்சத்திரங்களுடன் பல வெற்றி படங்களை கொடுத்தவர். 

1993 ஆம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழ் என்ற திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஷோபனா. இத்திரைப்படம் தான் பின்னாளில் சந்திரமுகி என்ற பெயரில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜா நடிகை சோபனாவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையைப் பற்றி தெரிவித்திருக்கிறார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புலியூர் சரோஜா நடிகை ஷோபனாவின் சினிமாவில் முதல் ஷாட்  முத்தக் காட்சியாக அமைந்தது. அதில் நடிக்க மறுத்து நடிகை சோபனா அழுததாகவும் அதன் பிறகு அவரது அம்மா வந்து எடுத்துக் கூறிய பின்  நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress shobana refuse to act in a kising scene


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->