40 வருட ஆசை.. ஆனா, சேர முடியல.! நடிகர் மீதான ஆசை குறித்து அம்மா நடிகை.! - Seithipunal
Seithipunal



40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ரேணுகா. இயக்குனர் பாலச்சந்தரின் பிரேமி என்ற  தொலைக்காட்சி தொடரின் மூலம்  அறிமுகமானவர் இவர். தமிழ்,மலையாளம் படங்கள் என 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றியத்தில் தனது  நடிப்பு மற்றும் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார் ரேணுகா. இதில் அவர் நடிப்பு துறைக்கு வந்தபோது எதுவும் தெரியாமலிருந்ததாகவும் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் டி ராஜேந்தர் ஆகியோர்தான் நடிப்பு போன்ற விஷயங்களை தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள இவர் தளபதி, விஜய் மற்றும் தல அஜித் ஆகியோருடன் தான் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் அந்த பேட்டியில் பேசிய இவர்  இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்காதது தான் தனது சினிமா வாழ்க்கையின் மிகப் பெரிய குறை என குறிப்பிட்டார்.

தனக்கு சூப்பர் ஸ்டார் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்ட அவர் தன்னுடைய தொலைக்காட்சி தொடர்களை பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து சூப்பர் ஸ்டார் பாராட்டுவார்" என தெரிவித்துள்ளார். அவருடன் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று தனக்கு நீண்ட நாள் ஆசை என குறிப்பிட்ட ரேணுகா அது நிச்சயமாக விரைவில் நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress renuka is eagerly waiting to act in superstar any film


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->