எனது மகளை பலாத்காரம் செய்து கொன்று விட்டார்கள்.!! 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகையின் தாய் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


நடிகை பிரதியுஷாவை சிலர் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாக   பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை பிரதியுஷா தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

அதனோடு, சில தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த, 2002ம் ஆண்டு நடிகை பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் திரை உலகை அதிர்ச்சி அடைய செய்தது. அவரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

நடிகை பிரதியுஷாவின் மர்ம மரணம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை பிரதியுஷாவின் அம்மா ஹைதராபாத்தில் 
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவளை சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன் பிறகு அவளை கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதை போன்று நாடகம் நடத்தியுள்ளனர்.

அவளது உடல் முழுவதும், நகக் கீரல்கள் இருந்ததை நான் பார்த்தேன். 

ஆனால், அவள் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்துவிடுவார்கள். 

குற்றவாளிகள் விடுதலை ஆனாலும், கடவுள் அவர்களை தண்டிப்பார்.

15 வருடங்களாக, என்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வரும் எனக்கு, யாருடைய ஆதரவும் இல்லை என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Pratyusha mother shocking interview


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->