நடிகை ஹன்சிகாவின் 51வது படத்தின்  டைட்டில்? படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு  ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தற்போது இவருடைய நடிப்பில் 105 மினிட்ஸ், பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான மஹா எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. தமிழிலும் தற்போது இவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இதனிடையே நடிகை ஹன்சிகா, தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை கடந்த டிசம்பர் 5ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் இயக்குனர் இகோர் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் அவரது 51வது படத்திற்கு 'மேன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரி அர்ஜுனன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, மணி ஒளிப்பதிவு செய்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress hansika Motwani new movie name man


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->