வெளியான செய்தி., யாரும் நம்பாதீங்க., நடிகை அஞ்சலி மறுப்பு.! - Seithipunal
Seithipunal


தனக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை என்று, நடிகை அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அங்காடித் தெரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, இறைவி உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

தற்போது, வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி, அதற்காக தனது உடல் எடையை குறைத்து அழகிய தோற்றத்துடன் காட்சி அளித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு கொரோனா நோய் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

இதனையறிந்த நடிகை அஞ்சலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளார். அவரின் அந்த மறுப்பு செய்தியில், "எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். இது முற்றிலும் பொய்யான செய்தி. இதனையரும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Anjali corona issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal