கே.ஜி.எஃப் நடிகர் யஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.?! முழு விவரங்கள் இதோ.! - Seithipunal
Seithipunal


கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து. கே ஜி எஃப்இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த  14ஆம் தேதி கே ஜி எஃப்  இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷ், அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் கே ஜி எஃப் 2-ஆம் பாகம் வெளியானது. கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வசூலை அள்ளிக் குவித்தது. 

இந்நிலையில், தற்போது நடிகர் யஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவரது வீடு 6 கோடி என்றும், விளம்பர மாடலிங் உள்ளிட்டவைகளுக்கு ரூ.60 லட்சம் பெறுகிறார் என்றும், கேஜிஎஃப் ரிலீசுக்கு முன்பு வரை அவரது சம்பளம் ரூ.4 முதல் ரூ.5 கோடியாக இருந்தது என்றும், தற்போது ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்றும், இவரது கார்களின் மதிப்பு ரூ.3.5 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor yash salary details 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->