அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திய நடிகர் விவேக்கிற்கு இன்று ஏற்பட்ட சோக நிகழ்வு!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக்நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் கால்பதித்த அவர் பாளையத்து அம்மன்,லவ்லி, அள்ளித்தந்த வானம், யூத், காதல் சடுகுடு, விசில, காதல் கிசு கிசு, பேரழகன், சாமி, திருமலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்தநிலையில், நடிகர் விவேக்கின் தயார் மணியம்மாள் (வயது 86) இன்று தற்போது மாரடைப்பால் சென்னையில் காலமானார், நாளை அவரது சொந்தவூரான சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. நடிகர் விவேக்கின் தாயார் மறைவுக்கு அவரது திரையுலக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

விவேக்கின் தந்தை அங்கையாத் தேவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor vivek mother passed away in this world


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->