ஹீரோவாக என்ட்ரி கொடுத்த பிரபல இயக்குநர் மகன்! நேரில் சென்று வாழ்த்திய நடிகர் விஜய்.! - Seithipunal
Seithipunal


'புது வசந்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன் .இதனை தொடர்ந்து அவர் பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 

இதனை தொடர்ந்து விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ''ஹிட் லிஸ்ட்'' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

சூரிய கதிர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கௌதமேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

பேனர் சத்யா இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் விரைவில் முடிந்து வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், விஜய் கனிஷ்கா ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார். 

அப்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள விஜய் கனிஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay congratulated Vikraman son Vijay Kanishka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->