28 வருடங்களுக்குப் பிறகு ஆசிரியரை சந்தித்த பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


28 வருடங்களுக்குப் பிறகு ஆசிரியரை சந்தித்த பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது ‘கங்குவா’ படத்தில் பிஸியாக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை லயோலா கல்லூரி மாணவரான நடிகர் சூர்யா கல்லூரியில் தனது ஆசிரியரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இந்தப் புகைப்படத்தை நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது, கடந்த 1995ம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்ற போது தனக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ராபர்ட்டை சந்தித்து பேசியுள்ளார். 

இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, "நான் 1995ம் ஆண்டு லயோலா கல்லூரியில் பி.காம் படித்த போது எனக்கு வழிகாட்டியாக இருந்த ராபர் சாரை சந்தித்து அவரது ஆசி பெற்றேன். உங்களது பிரேயருக்கு வாழ்த்துகள்’ என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor surya meet professer after 28 years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->