இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் கிறிஸ்துமஸ் வாழ்த்து:  - Seithipunal
Seithipunal


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோ மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

பான் இந்திய படமாக வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் 4500 க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும், அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என பட குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.  

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் திரைப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரம் தொப்பி அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sivakarthikeyan Christmas wish goes viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->