டிக்கிலோனா படத்தின் அட்டகாசமான டிரெய்லர்.. மாஸ் காட்டும் சந்தானம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


நகைசுவை நடிகர் சந்தானம் காமெடி உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவர் காமெடி நடிகர்களில் இருந்து, கதாநாயகனாக ப்ரமோஷன் ஆனதில் இருந்து பல மாறுபட்ட கதாபாத்திரங்கள், பேய் படங்கள், அடிதடி படங்கள் என்று நடித்து வருகிறார். 

இவர் எந்த விதமான கதையம்சத்தை தேர்வு செய்தாலும், அதில் தனது இயல்பான காமெடி மற்றும் கலாய்களை சேர்த்து வைத்து திரையரங்கில் படம் பார்க்க வந்த அனைவரையும் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்துவிடுவார். 

தற்போது சால்ட் அண்ட் பெப்பர் என்பதை போல காமெடியுடன் அடிதடியையும் சேர்த்து எனக்கும் அடிக்க தெரியும் என்று பல டயலாக்குகளை பேசி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார். எங்களின் நாயகனும் நாலு பேரை அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்தது. 

அடுத்தடுத்து பல படங்கள் கைவசம் இருக்கும் நிலையில், இரண்டு படங்கள் சில பிரச்சனை காரணமாகி ரிலீஸ் தள்ளிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், சந்தானம் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். 

இந்த படம் இந்த 2020 வருடத்தின் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தில் ஹர்பஜன் சிங், அனகா, சிரின் கஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்த ராஜ், ராமதாஸ், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லக்ஷ்மணன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். 

கார்த்திக் யோகியின் இயக்கத்தில் தயாராகும் படத்திற்கு, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை ராஜேஷ் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் முதல் புகைப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், இரண்டாவது புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகியது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 2020 ஆம் வருடத்தின் மிகப்பெரிய காமெடி அண்ட் என்டர்டைன்மெண்ட் படம் தயாராகியுள்ளதை இது தெளிவுப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Santhanam Dikkiloona Movie Trailer


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->