பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை!  - Seithipunal
Seithipunal


காவிரி நீர் விவகாரம் கர்நாடக தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என அடுத்தடுத்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடக திரைப்பட நடிகர்கள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர். கன்னட நடிகர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், தமிழ் நடிகர்கள் நடத்தவில்லையா? அதுவும் குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுப்பாரா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

விசிக கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு, ரஜினிகாந்த் காவிரி விவகாரம் குறித்து வாய் திறப்பாரா? கள்ள மவுனம் ஏன் காக்கிறார்? என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கையானது ஒன்று வெளியாகி இருக்கிறது. 

ஆனால் அந்த அறிக்கை காவிரி விவகாரம் பற்றியது அல்ல. இயக்குநர் பி வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் சந்திரமுகி 2 படத்திற்கான வாழ்த்தினை அறிக்கையாக அவர் வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகப்பெரிய வெற்றிப் படமான தன்னுடைய சந்திரமுகியை, புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திரு பி வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்" என அவர் தெரிவித்திருக்கிறார். 

பி வாசு இயக்கத்தில், சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்து மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Rajinikanth wish to Chandramukhi 2 cast and crew


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->