ஜெயிலர் படத்தை பாட்டு தான் ஹிட் ஆக்கியது - ரஜினிகாந்தின் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


ஜெயிலர் படத்தை பாட்டு தான் ஹிட் ஆக்கியது - ரஜினிகாந்தின் சர்ச்சை பேச்சு.!

கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் இசை அமைத்திருந்த இத்திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு சொகுசு கார்களையும், படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயமும், சன் குழும ஊழியர்களுக்கு வெள்ளி நாணயமும் பரிசளிக்கப்பட்டது

இந்த நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், படத்தில் நடித்திருந்த ரஜினி, தமன்னா, சுனில், அனிருத், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, விழா மேடையில் பேசிய ரஜினிகாந்த், 'ஜெயிலர்' திரைப்படம் ஆவரேஜ் தான். அனிருத்தின் இசையே படத்தை தூக்கி நிறுத்தி ஹிட் ஆக்கியுள்ளது என்று தெரிவித்தார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajinikanth said jailer movie is average


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal