இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான நடிகர் கவின்!மகிழ்ச்சியுடன் அறிவிப்பு!கொண்டாட்டத்தில் குடும்பம்!
Actor Kavin becomes a father to twins Joyful announcement Family in celebration
நடிகர் கவின் தனது வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அவர் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பின்னர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் மேலும் கவனம் பெற்றார். அதன் பிறகு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி 'லிஃப்ட்', 'டாடா', 'ஸ்டார்', 'ப்ளடி பெக்கர்', 'மாஸ்க்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் 'டாடா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், கவினின் நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தனது நீண்டநாள் காதலியான மோனிகாவை 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கவின், தற்போது குடும்ப வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கவின் வெளியிட்டுள்ள பதிவில்,"எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்."என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கவினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கவின் தற்போது இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
குடும்ப வாழ்க்கையில் இரட்டை மகிழ்ச்சியை பெற்றுள்ள கவினுக்கு, 'ஹாய்' திரைப்படமும் வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Actor Kavin becomes a father to twins Joyful announcement Family in celebration