சிம்பு, கவுதம் கார்த்திக்குடன் இணையும் அடுத்த நடிகர்.! சஸ்பென்ஸில் உறையும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடைய 20வது திரைப்படமான "பத்து தல" படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா தான் இந்த படத்தையும் இயக்குகிறார். 

கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி 10 மணிக்கு இந்த படத்துடைய டைட்டில் "பத்து தல" என்று போஸ்டருடன் வெளியாகியது. முப்தி எனும் கன்னட படத்தின் ரீமேக் படமான இதன் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் குட்டையான உடையில் ஆட்டம் போடும் பிரியா பவானி சங்கர்.! -  Seithipunal

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. இதில், கதைப்படி சிம்புவுக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்த டீஜே அருணாச்சலம், 'பத்து தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. மேலும், கவிஞர் மனுஷ்யபுத்திரனும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கலையரசன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குனர் கிருஷ்ணா கூறியுள்ளார். படத்தில்  நிறைய பிரபலங்கள் அடுத்தடுத்து இணைவது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்துகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kalaiyarasan in pathu thala movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->