பைக் ரெய்டு ஓவர்.. அடுத்து "விடா முயற்சி" தான்.!! வைரலாகும் அஜித்குமார் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் 62வது படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விடா முயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கடந்த மே 1ம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு விடா முயற்சி படத்தின் அப்டேட் வெளியானது. அதன்பிறகு எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் விடா முயற்சி திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கோடம்பாக்கம் வட்டாரங்கள் முனுமுனுத்தன. இதற்கிடையே நடிகர் அஜித்குமார் மீண்டும் வெளிநாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் சென்றுவிட்டார்.

ஐரோப்பிய நாடுகளான நார்வே, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் நடிகர் அஜித் குமார். இதனால் அப்டேட் இல்லாமல் சோர்ந்து போன நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையான பைக் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் திடீரென என்ட்ரி கொடுத்த அஜித்குமாரை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பிறகு அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். நடிகர் அஜித்குமார் தற்போது சென்னை திரும்பியுள்ளதால் விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அப்டேட் இன்று அல்லது நாளைக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பி இருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor AjithKumar is back in Chennai and vidamuyarchi shoot is expected to start


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->