தளபதிக்காக களமிறங்கிய தல ரசிகர்கள்... நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியிருந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் காரணமாக பட வெளியீடு தள்ளி சென்றது. இந்நிலையில், இறுதியாக பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகவுள்ளது. 

திரைப்படங்கள் பொதுவாக வெளியாகும் போது, திருட்டுத்தனமாக படமெடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகும் செயலானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஓ.டி.டி தளங்களில் படங்கள் வெளியிடப்பட்டாலும், அந்த படங்களும் திருட்டுத்தனமாக பல இணையங்களில் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், மாஸ்டர் திரைப்பட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், திரைப்படத்தை இணையத்தில் கண்டால் ரிப்போர்ட் செய்யுமாறும், அதனை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த விஷயம் இன்றைய நாளில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பலதரப்பு ரசிகர்களும் படத்தை பகிர வேண்டாம் என்ற கோரிக்கையையும் வைத்து வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் காட்சிகளை அஜித் ரசிகர்கள் பகிரவோ அல்லது பார்க்கவோ வேண்டாம் என்று கூறியுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும், திரைப்படத்தை உருவாக்க பல கஷ்டங்கள், பொருட்செலவு செய்து படத்தை எடுத்திருப்பார்கள். அவர்களுக்கும் - நமக்கும் திரைப்பட கொண்டாட்டங்கள் ரீதியிலான மோதல் மற்றும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அந்த கருத்து வேறுபாடுகளை இந்த இடத்தில் நாம் காண்பிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith Fans Support Stop Movie Piracy about MASTER Movie Video Release Social Media


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal