ஜெயிலர் படக்குழுவினர் 200 பேருக்கும் அசத்தல் பரிசு!
2grams gold coins awarded to Jailer movie workers
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட நடிகர் பட்டாள்களுடன் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைவாரி குவித்தது.

இதனை கொண்டாடும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அப்படத்தின் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கியது. அதேபோன்று நடிகர் ரஜினிகாந்த்திற்கு காசோலை வழங்கியது.

அந்த வரிசையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் பணியாற்றிய 200 திரைப்பட பணியாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்க காசு வழங்கப்பட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக உழைத்ததற்கு 200 பேருக்கும் தலா 2 கிராம் தங்க காசு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு புறம் ஜெய்லர் எனவும் மறுபுறம் சன் பிக்சர்ஸ் என்றும் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
2grams gold coins awarded to Jailer movie workers