20 மாத்திரைகள் தினமும்… விசாரணை சுமை இனி முடியாது என 'மனு'...! - மீரா மிதுனுக்கு நீதிமன்றத்தின் ‘NO’...!
20 pills daily Pleading that burden trial cannot lifted anymore Courts NO Meera Mithun
நடிகையும் மாடலுமான மீரா மிதுன், பட்டியலினத்தை அவமதிக்கும் வகையில் 2021ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக, அவர்மீது புகார் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மீரா மிதுனும் அவர் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.ஆனால், விசாரணைக்கு பலமுறை ஆஜராக தவறியதால், 2022ஆம் ஆண்டில் மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அவர், சமீபத்தில் சென்னை திரும்பி, முதல் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.இந்த சூழ்நிலையில், தம்மீது நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, மீரா மிதுன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தினமும் 20 மாத்திரைகள் எடுத்துவரும் நிலை காரணமாக உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைவால் உடல் சோர்வு அதிகரித்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விசாரணையை எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் சக்தி இல்லாததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், “வழக்கை ரத்து செய்யும் கோரிக்கை விசாரணை நீதிமன்றத்தில்தான் முன்வைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துவிட்டு, மீரா மிதுனின் மனுவை தள்ளுபடி செய்யும் உத்தரவை வழங்கியது.
English Summary
20 pills daily Pleading that burden trial cannot lifted anymore Courts NO Meera Mithun