தனுஷ், அமலா பால் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிக்க வேண்டும் - தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ், அமலா பால், லக்‌ஷ்மி ராய் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியுள்ளது.

ஜூன் 18ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் ஆகியோரின் பட்டியலை சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம், அவர்கள் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர், நடிகையுடன் என்ன பிரச்சனை என்பதை கடிதம் மூலம் ஜூன் 28க்குள் விளக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் தயாரிப்பாளர் சங்கம் – நடிகர் சங்கம் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் நடிகர் தனுஷ் படத்தை முடித்துக் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கிய படம் முழுமையடையாமல் இருக்கிறது என்றும் இந்தப் படத்தை தனுஷ் முடித்துத் தர வேண்டும் இல்லையென்றால் ரெட்கார்டு வழங்க வேண்டும் என தேனாண்டாள் பிலிம்ஸ் முறையிட்டுள்ளது. இதேபோல் அமலா பால், லக்‌ஷ்மி ராய் உட்பட 14 நடிகர், நடிகையர் மீது தயாரிப்பாளர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, விரைவில் முடிவெடுக்கப்படும் என்று நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 actors including Dhanush Amala Paul should be redcarded demand of producer association


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->