குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் கார் – எம்ஜி கமெட் EV! பல்வேறு அம்சங்களுடன் விற்பனை தொடக்கம்! - Seithipunal
Seithipunal


இப்போதெல்லாம் எலக்ட்ரிக் கார்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால் விலை அதிகம்னு நினைக்கிறவர்கள் நிறைய பேர். அப்படிப்பட்டவர்களுக்கு குறைந்த பட்ஜெட்டில், நல்ல ஃபீச்சர்ஸும், நம்பகத்தன்மையும் கொண்ட எலக்ட்ரிக் கார் தேவைப்படும்னா, எம்ஜி கமெட் EV நல்ல தேர்வு.

இந்த கார் ₹7 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலிருந்து ஆரம்பமாகுது. ஊருக்கேற்ப ஆன்-ரோடு விலை ₹7.30 லட்சம் முதல் ₹8 லட்சம் வரை இருக்கும். ₹1 லட்சம் டவுன் பேமெண்ட் கொடுத்தா, மீதியை லோன்ல வாங்கலாம். 9.8% வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு மாதம் சுமார் ₹13,400 EMI ஆகும். மொத்தம் 5 ஆண்டுகளில் ₹8 லட்சம் செலவாகும்.

டெக்னிக்கல் டீடெயில்ஸ்:

17.3 kWh லித்தியம்-அயன் பேட்டரி

ஒரு ஃபுல் சார்ஜில் 230 கி.மீ ரேஞ்ச்

41.4 PS பவர், 110 Nm டார்க்

0–100% AC சார்ஜ் நேரம்: 7 மணி நேரம்

மூன்று டிரைவிங் மோட்ஸ் – Eco, Normal, Sport

பாதுகாப்பு & வசதிகள்:
டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா & சென்சார், ABS + EBD, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், LED DRLs, LED டெயில் லேம்ப்ஸ், டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், வாய்ஸ் கமாண்ட், வயர்லெஸ் Android Auto & Apple CarPlay, i-Smart இன்டர்நெட் கனெக்டட் டெக்னாலஜி எல்லாம் இருக்கு.

சின்ன டிசைன், ஸ்மூத் டிரைவிங், குறைந்த மெயின்டனன்ஸ் – இந்த மூன்றும் சேர்ந்தால், எம்ஜி கமெட் EV நகரத்தில் ட்ராஃபிக்குள்ள ஓட்டுறதுக்கு ரொம்ப ஈஸியான, பயனுள்ள கார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The best electric car available at a low price MG Comet EV Sales start with various features


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->