வீடு, வாகனம், தனிநபர்... சற்றுமுன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பு.!
RBI announce 2022
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் தெரிவித்ததாவது, "வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இத மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக அதிகரிக்கும்.
இது இப்போதே அமலுக்கு வருகிறது. நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வு காரணமாக, வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
நடப்பு நிதியாண்டில் 2022-23 மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக தொடர்ந்து நீடிக்கும்.
2023-24 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.