அசத்தலான புதிய ஹீரோ ஸ்கூட்டர் - வெளியான விவரங்கள்! - Seithipunal
Seithipunal


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் புதிய ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டர் இந்திய சந்தையில் 110 சிசி பிரிவில் விற்பனைக்கு வர உள்ளது. 

இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. 

புது ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110 எனும் பெயரில் விற்பனைக்கு வர உள்ளது. புதிய மேஸ்ட்ரோ சூம் 110 ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்பட உள்ளது. 

மேலும், இதில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட உள்ளது. 

இந்த என்ஜின் 8.04 ஹெச்பி பவர் மற்றும் 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Hero Scooter Details Revealed


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->