அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! எத்தனால் கலவை 27% ஆக உயர்வு – பசுமை எரிசக்திக்கு இந்தியா எடுத்த பெரிய முடிவு! - Seithipunal
Seithipunal


பெட்ரோலில் எத்தனாலின் கலவை அளவை தற்போதைய 20 சதவீதத்தில் இருந்து மேலும் அதிகரிக்க வேண்டும் என எத்தனால் உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக உடனடி புதிய கொள்கைகளை கொண்டு வரவும் வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2025–26 நிதியாண்டுக்கான 10,500 மில்லியன் லிட்டர் தேவைக்கு பதிலாக, உற்பத்தியாளர்கள் 17,760 மில்லியன் லிட்டர் எத்தனாலை தயாரித்துள்ளனர். ஆனால் இதனை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்க முடியாமல் அவர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர்.

கரும்பு அடிப்படையிலான உற்பத்தி நிலையங்கள் 4,700 மில்லியன் லிட்டர் எத்தனாலை, தானிய அடிப்படையிலான நிலையங்கள் 13,000 மில்லியன் லிட்டர் எத்தனாலை வழங்க முன்வந்துள்ளன. இதனால் எத்தனால் உற்பத்தி துறை தங்களது திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, எத்தனால் தொழிலில் ₹40,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் பிரேசில் நாட்டைப் போலவே, எத்தனால் கலவையை 27% ஆக உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, இதனால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மேம்படும், கார்பன் உமிழ்வு குறையும், மேலும் நாட்டின் அந்நியச் செலாவணியிலும் பெரும் சேமிப்பு ஏற்படும். ஏற்கனவே 2024–25 நிதியாண்டில் மட்டும் எத்தனால் கலப்பு திட்டம் ரூ.40,000 கோடி அந்நியச் செலவைச் சேமிக்க உதவியுள்ளது.

தற்போது இந்தியா ஆண்டுக்கு சுமார் 17,000 மில்லியன் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் அதில் 11,000 முதல் 12,000 மில்லியன் லிட்டர் மட்டுமே வாங்குகின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் தங்கள் கூடுதல் உற்பத்தியை விற்பனை செய்ய முடியாமல் உள்ளனர்.

மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலவை அளவை 27% (E27) ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது 2030ஆம் ஆண்டிற்குள் 30% கலவை என்ற இலக்கை நோக்கிய முக்கியமான படியாக கருதப்படுகிறது.

ஆனால் இதன் நடைமுறையில் சில சவால்களும் உள்ளன. பல வாகன உரிமையாளர்கள், 20% எத்தனால் கலவையுடன் (E20) வந்த பெட்ரோல் வாகனங்களில் மைலேஜ் குறைவு, எஞ்சின் பவர் குறைவு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், பெரும்பாலான வாகனங்கள் இன்னும் E20க்கு ஏற்றவையாக இல்லை என்பதால், சேவை மையங்கள் எஞ்சின் தேய்மானம், கேஸ்கெட் பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்து வருகின்றன.

இருப்பினும், இந்தியா பசுமையான எரிசக்திக்கான பாதையில் தைரியமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலவை அளவை 2% இலிருந்து 20% வரை உயர்த்திய இந்தியா, இப்போது 27% என்ற புதிய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது, சுத்தமான எரிசக்தி மற்றும் சுயநிறைவு பெற்ற எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியமான மாற்றம் என்று நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorists in shock Ethanol blend increases to 27percentage India big decision for green energy


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->