அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லதரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . 

இதனால், கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,575 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,929 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,432-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,566 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,528க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,920 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 200 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 74.70 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 74,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

july 16 gold price in chennai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->