மே 9-ல் தங்கம் வாங்க இது சரியான நேரமா...? - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...!
Is May 9th right time buy gold Today gold and silver price situation
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வுகளால் நகை சந்தையை அதிரவைத்து வருகிறது. ஒரு நாள் குறையும் நிலை ஏற்பட்டால், மறுநாளே அதிரடி உயர்வை பதிவு செய்வதால் முதலீட்டாளர்களும் நகை பிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.கடந்த 4-ந் தேதி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் நிலைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து 5-ந் தேதி தங்கம் திடீர் சரிவை சந்தித்தது. அன்றைய தினம் ஒரு கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.13 ஆயிரத்து 820-க்கும், ஒரு சவரன் ரூ.1,440 வீழ்ச்சி அடைந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது.ஆனால் அடுத்த நாளே சந்தை முழுமையாக தலைகீழானது.

6-ந் தேதி ஒரே நாளில் இரண்டு முறை தங்க விலை உயர்வு கண்டது. காலை நேர வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1,840 அதிகரித்தது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டதால் நகை வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 7-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் ரூ.14,150 என்ற உச்ச நிலையை எட்டியது. நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையே தொடர்ந்தது.இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நிலைத்திருக்கிறது.
ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்த நிலையில் தங்கம் நீடிப்பதால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் சற்றே தயக்கத்துடன் சந்தையை கவனித்து வருகின்றனர்.வெள்ளி விலையிலும் இன்று மாற்றமின்றி அமைதியான நிலை காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்க விலை நிலவரம்:
08-05-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200
07-05-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200
06-05-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
கடந்த சில நாட்களின் வெள்ளி விலை நிலவரம்:
08-05-2026 – ஒரு கிராம் ரூ.280
07-05-2026 – ஒரு கிராம் ரூ.275
06-05-2026 – ஒரு கிராம் ரூ.275
English Summary
Is May 9th right time buy gold Today gold and silver price situation