மொத்தம் ரூ. 2.37 லட்சம் கோடி! புதிய உச்சம் தொட்ட மாத ஜிஎஸ்டி வருவாய்! - Seithipunal
Seithipunal


2025 ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெளியான அறிக்கையில், 2025-26 நிதியாண்டின் முதலாவது மாதமான ஏப்ரலில் கிடைத்த ரூ.2.37 லட்சம் கோடி வருவாய், கடந்த ஆண்டு அதே மாதத்தில் பதிவான ரூ.2.1 லட்சம் கோடியைவிட 12.6% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2017-ல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஒரே மாதத்தில் பெறப்பட்ட அதிகபட்ச வருவாய் ஆகும்.

மேலும், இந்த வருவாயில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி மட்டுமே ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10.7% உயர்வு. அதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வசூலிக்கப்பட்ட வரி 20.8% அதிகரித்து ரூ.46,913 கோடியாக உள்ளது.

இதனுடன், கடந்த மார்ச் மாத வருவாயான ரூ.1.96 லட்சம் கோடியைவிட ஏப்ரல் வருமானம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India April GST report


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->