நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம் விலையில் அதிரடி சரிவு...! இன்றைய தங்க விலை நிலவரம் என்ன...?
Good news jewelry lovers Gold prices drop sharply What current gold price situation
தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி உயர்ந்த நிலையில், இன்று நகை வாங்க காத்திருந்த மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் வகையில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும், ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும் விற்பனையானது.

அதேபோல் வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில் இன்று தங்கத்தின் விலையில் திடீர் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கு விற்பனையாகிறது.
மேலும் சவரனுக்கு ரூ.400 சரிந்ததால், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மறுபுறம் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்வை பதிவு செய்துள்ளது.
ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம் அதிகரித்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் சற்றே இறங்கிய நிலையில், வெள்ளி மீண்டும் வேகமாக ஏறத் தொடங்கியுள்ளது நகை வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Good news jewelry lovers Gold prices drop sharply What current gold price situation