உச்சத்திலிருந்து கீழிறங்கிய தங்கம்… நகை வாங்குவோருக்கு டபுள் குட் நியூஸ்! இன்றைய விலை நிலவரம் என்ன...?
Gold prices have fallen from peak Double good news jewellery buyers What today prices
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தினமும் ஏற்றத்தாழ்வுகளுடன் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருந்த நிலையில், காலை–மாலை என இருவேளைகளிலும் உயர்ந்த விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் தொடர்ச்சியான உயர்வுக்குப் பிறகு தற்போது தங்க சந்தையில் சிறிய ‘ரிலீஃப்’ கிடைத்துள்ளது.

நேற்று கிராமுக்கு ரூ.580 சரிந்து, ஒரு கிராம் ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560-க்கும் விற்பனையான தங்கம், இன்று இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,120-க்கும், சவரனுக்கு ரூ.1,600 சரிந்து ரூ.1,12,960-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் சரிவில் சென்றுள்ளது; கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், ஒரு பார் வெள்ளி ரூ.2.80 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களின் விலை நிலவரத்தைப் பார்த்தால், தங்கம் ஒரு நாளில் ஏறி மறுநாளில் இறங்கும் ரோலர்-கோஸ்டர் போல் மாறி வருகிறது.
01-02-2026 அன்று ரூ.1,19,200 இருந்த சவரன் விலை, இடையில் உயர்வு–சரிவுகளை சந்தித்து தற்போது ரூ.1,12,960-க்கு வந்துள்ளது. அதேபோல் வெள்ளியும் ரூ.320-இல் இருந்து ரூ.280 வரை சரிந்துள்ளது.
இந்த திடீர் விலை இறக்கம் நகை வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்தாலும், சந்தையின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
English Summary
Gold prices have fallen from peak Double good news jewellery buyers What today prices