ஒரே நாளில் இருமுறை உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Gold Price Today
கடந்த 26-ம் தேதியிலிருந்து தங்கம் விலை மறுபடியும் உயர்வை தொடங்கிய நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 31) கூடுதலாக இருமுறை உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,360, ஒரு சவரன் ரூ.66,880 ஆக இருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,425, ஒரு சவரன் ரூ.67,400 ஆக விற்பனை செய்யப்பட்டது.
மேலும், இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. காலை ரூ.520, மாலை ரூ.200 என இரண்டு கட்டமாக உயர்ந்ததால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.67,600 ஆகியுள்ளது.
கிராமுக்கு ரூ.85 உயர்ந்ததால், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,450 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்:
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.113 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,13,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
📌 31-03-2025 – ₹67,600
📌 30-03-2025 – ₹66,880
📌 29-03-2025 – ₹66,880
📌 28-03-2025 – ₹66,720
📌 27-03-2025 – ₹65,880