இன்னொரு சாதனை...! தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு...!
Another record Gold and silver prices see dramatic increase single day
கடந்த மாதம் டிசம்பர் 15-ந் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாற்று மைல் கல்லை எட்டியது. அதனைத் தொடர்ந்து சில நாட்கள் சரிவை சந்தித்த தங்கம், டிசம்பர் 22-ந் தேதி முதல் மீண்டும் ஏற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
டிசம்பர் 28-ந் தேதி புதிய உச்சத்தை தொட்ட தங்கம், அதன் பின்னர் வேகமாக இறங்கி, கடந்த ஒரு வாரமாக மீண்டும் தொடர்ச்சியான ஏற்றத்துடன் நிலைத்திருக்கிறது.இந்த போக்கின் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,120-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,960-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,170-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,360-க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், வெள்ளி விலையும் அதனைப் பின்தொடர்ந்து அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.292-க்கும், ஒரு கிலோ ரூ.2,92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை:
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய வெள்ளி விலை:
தங்கம் போலவே வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 உயர்ந்து ரூ.3,07,000-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.307-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
13.01.2026 – ஒரு சவரன் ரூ.1,06,240
12.01.2026 – ஒரு சவரன் ரூ.1,05,360
11.01.2026 – ஒரு சவரன் ரூ.1,04,960
10.01.2026 – ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 – ஒரு சவரன் ரூ.1,02,400
English Summary
Another record Gold and silver prices see dramatic increase single day