பொங்கல் கொண்டாட்டம் சென்னையில் உச்சம்...! ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தை நகரமெங்கும் பரப்பும் வகையில், கனிமொழி எம்.பி. முன்னெடுக்கும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ இந்த ஆண்டும் சென்னையை கலைத் தலைநகராக மாற்றவுள்ளது.

தமிழ் பாரம்பரியம், நாட்டுப்புற கலைகள், இசை-நடனங்களின் சங்கமமாக உருவாகும் இந்த மாபெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.,15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை, தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, சென்னையின் 20 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு சென்னை சங்கமத்தில் முதல் முறையாக ‘கோ-ஆப்டெக்ஸ்’ மற்றும் கலை-பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு சிறப்பு அம்சமாக இடம்பெறுகிறது. இந்த அணிவகுப்பு காணும் பொங்கலான 17-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள தேசிய கலைக்கூடம் முன்புறத்தில் நடைபெற உள்ளது எனவும் அவர் கூறினார்.

நகரின் பல்வேறு பகுதிகளை கலை மேடைகளாக மாற்றும் இந்த விழா,செம்மொழி பூங்கா,கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம்,கிண்டி கத்திபாரா பூங்கா, ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை வளாகம்,   ராயபுரம் ராபின்சன் மைதானம், ராஜா அண்ணாமலைபுரம் இசைக்கல்லூரி, திருவான்மியூர் கடற்கரை, அண்ணாநகர் கோபுர பூங்கா,எழும்பூர் அரசு அருங்காட்சியகம், வள்ளுவர்கோட்டம், மெரினா கடற்கரை, தியாகராயநகர் நடேசன் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற உள்ளது.தமிழகத்தின் நாட்டுப்புற கலை மரபுகள், இசை, நடனம், ஆடை, கைவினை கலாச்சாரம் ஆகியவை ஒரே மேடையில் சங்கமிக்கும் இந்த விழா, பொங்கல் திருநாளை மக்கள் திருவிழாவாக மாற்றும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal celebrations reach their peak Chennai Chennai Sangamam Our City Festival Chief Minister MK Stalin inaugurate it


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




சினிமா

Seithipunal
--> -->