ரூ.94,999 விலையில் ஆம்பியர் மேக்னஸ் கிராண்டு மேக்ஸ்: 142 கிமீ ரேஞ்சுடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற நிறுவனங்களும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வரிசையில், கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் பிராண்டு, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளது. ‘ஆம்பியர் மேக்னஸ் கிராண்டு மேக்ஸ்’ (Ampere Magnus Grand Max) என பெயரிடப்பட்ட இந்த புதிய மாடல், ரூ.94,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள மேக்னஸ் கிராண்டு மாடலை விட சற்று ப்ரீமியமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், அதிக வசதிகளும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3 kWh திறன் கொண்ட LFP பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி, ஒருமுறை முழு சார்ஜில் 142 கிமீ வரை சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது. தினசரி பயன்பாட்டுக்கான எக்கோ மோடில் சுமார் 100 கிமீ வரை பயணிக்க முடியும் என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.

இந்த பேட்டரியை ஹோம் சார்ஜர் மூலம் 20 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சுமார் 4.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். மேலும், 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ வரை பேட்டரிக்கு வாரண்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, இதில் அதிகபட்சமாக 2.4 kW மற்றும் வழக்கமான நிலையில் 1.5 kW பவரை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மணிக்கு அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் செல்லும் திறன் இந்த ஸ்கூட்டருக்கு உள்ளது.

ரைடிங் அனுபவத்தை மேம்படுத்த, எக்கோ மற்றும் சிட்டி என இரண்டு ரைடிங் மோடுகளும், ரிவர்ஸ் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்னால் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 3.5 இன்ச் LCD டிஸ்ப்ளே, டூயல் டோன் கலர் ஸ்கீம் மற்றும் 33 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டர்சீட் ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது.

மான்சூன் ப்ளூ, மாட்சா கிரீன் மற்றும் சின்னமன் காப்பர் என மூன்று நிறங்களில் இந்த புதிய மேக்னஸ் கிராண்டு மேக்ஸ் ஸ்கூட்டர் கிடைக்கிறது. தொடர்ந்து நிலையான விற்பனையை பதிவு செய்து வரும் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, இந்த புதிய மாடலின் மூலம் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தி, முன்னணி ஐந்து நிறுவனங்களுக்குள் இடம்பிடிக்கும் வாய்ப்பும் இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ampere Magnus Grand Max launched at Rs 94999 New electric scooter with 142 km range launched


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->