மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரிப்பு;பங்குச் சந்தைகள் தொடர்ந்து 03வது நாளாக கடும் வீழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


மேற்காசியாவில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், பங்குச் சந்தைகள் தொடர்ந்து 03வது நாளாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பதால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.29% வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அதன்படி, இந்தியப் பங்குச் சந்தைகள் சென்செக்ஸ், நிஃப்டி கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து, முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேற்காசிய போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் ஆகியவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

மேற்கு ஆசியாவில் இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், உலகளாவிய சந்தைகளின் ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக உள்நாட்டு சந்தையில் சாதகமான தாக்கம் ஏற்பட்டது.ரெப்போ விகிதத்தை நிலையாக  வைத்திருக்க ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு, அனைத்துத் துறைகளிலும் நடந்த அதிகப்படியான கொள்முதல் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் வலிமை ஆகியவையும் முதலீட்டாளர்களின் மனநிலையை அதிகரித்தன.

இந்த சூழலில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்து 76,664 புள்ளிகளில் வர்த்தகமாயின. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், அடிப்படை கட்டமைப்புத் தொழில் நிறுவன பங்குகள் விலை குறைந்தன. இன்போசிஸ் பங்கு 7%, ஹெச்.சி.எல்.டெக். பங்கு 5.8%, டி.சி.எஸ். பங்கு 4.7%, டெக் மகிந்திரா பங்கு 4.4% விலை குறைந்தன.

அடுத்ததாக, சன் ஃபார்மா, ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ, இண்டிகோ, ரிலையன்ஸ், மாருதி சுசூகி பங்குகளும் விலை குறைந்தன. மற்றும் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 275 புள்ளிகள் சரிந்து 23,898 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மும்பை சந்தையில் வர்த்தகமான 4,396 நிறுவன பங்குகளில் 2,905 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. 1,326 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமான நிலையில் 165 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amid escalating war tensions in West Asia stock markets suffer a sharp decline for the third consecutive day


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->